1. Home
  2. தமிழ்நாடு

#SHOCKING : ரயிலில் தமிழர்கள் மீது தாக்குதல்!

Q

தமிழ்நாடு - காசி இடையிலான பழமையான உறவை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கேடிஎஸ் 3.0 என்ற பெயரில் காசி தமிழ்ச் சங்கமத்தின் 3ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 நாட்டுப்புற கலைஞர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர். அப்போது நாக்பூரை அந்த ரயில் அடைந்தபோது முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அந்தப் பெட்டிகளில் ஏற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது ரயிலில் ஏறிய வட மாநிலத்தவர்கள் பலர், அவர்கள் மீது பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர். முன்பதிவு செய்யாத நபர்கள் ரயிலில் ஏறி இந்த தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வாக்குவாதத்தில், ரயிலின் கண்ணாடி, ஜன்னல்களை உடைத்து வடமாநிலத்தவர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனால் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாட்டுப்புற கலைஞர்கள் பேருந்து மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


 


 

Trending News

Latest News

You May Like