தமிழகத்தை உலுக்கிய கோரம்..! 7வது நபரின் உடல் மீட்பு..!
திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில், நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சிக்கிக்கொண்டது.
அதில், ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறியதால் தப்பினர். மற்றொரு வீட்டில் பாறைகளும் அடுத்தடுத்து விழுந்தன. அந்த வீட்டுக்குள் இருந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார்(32) அவரது மனைவி மீனா(26), மற்றும் அவர்களது மகன் கவுதம்(9), மகள் மீனா(7) மேலும் உறவினர்களான சுரேஷ் என்பவரது மகள் மகா(12), சரவணன் மகள் ரம்யா(12), மஞ்சுநாதன் மகள் வினோதினி(14) ஆகிய 7 பேரும் மண் சரிவில் சிக்கி வெளியேற முடியவில்லை.
அவர்களை மீட்கும் பணியில் யாரும் ஈடுபட முடியவில்லை.அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனாலும், மண் சரிவில் சிக்கி வீட்டின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று அதிகாலை தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 பேர், மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்பு துறையினர் கொண்ட மீட்பு படையினர் களமிறங்கினர். . அங்கு சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ல், பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வர முடியாததால், மண் சரிவை அகற்றுவதில் சிக்கலும் தாமதமும் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று சிறிய ஜேசிபி இயந்திரத்தை குறுகலான பாதையின் வழியே படிப்படியாக கொண்டு செல்லும் முயற்சி நடந்தது.
நீண்ட நேர தேடுதலுக்கு பின் 7-வது நபரின் உடல் மீட்கப்பட்டது. ஏற்கனவே 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 7வது நபரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீண்ட நேர தேடுதல் பணிக்குப் பின் ரம்யா என்பவரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்டது.