அதிர்ச்சி.. கையை பிடித்து இழுத்து பெண் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்..

அதிர்ச்சி.. கையை பிடித்து இழுத்து பெண் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்..

அதிர்ச்சி.. கையை பிடித்து இழுத்து பெண் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்..
X

தமிழகம் முழுவதும் கொரோனா பீதி நிலவி வரும் நிலையில் முன்கள பணியில் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். அனைத்து பகுதிகளிலும்  வீதி வீதியாக சென்று சுகாதார பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு மாஸ்க், கையுறை போன்றவை முறையாக வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் மனஉளைச்சலில் உள்ளனர். 

இந்நிலையில் பெண் தூய்மைப்பணியாளருக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. 

கோவையின் இருகூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் பெண்ணிடம் பணியின்போது, பேரூராட்சியில் ஓட்டுநராக பணியாற்றும் ராஜதுரை என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், தூய்மைப்பணியாளரை கையைப் பிடித்து மீண்டும் இழுத்து ராஜதுரை அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த பெண், தற்கொலைக்கு முயன்ற நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார், ராஜதுரையை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in 

Next Story
Share it