மூன்றாவது நாளாக அதிர்ச்சி கொடுக்கும் விலை!
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.53,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,670க்கு விற்பனையானது.
இன்றைய (செப்டம்பர் 04) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,670-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,125-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,000-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.