வெளியான அதிர்ச்சி தகவல்..! 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி..!
சத்யராஜுக்கு மகேஸ்வரி என்பவருடன் 1979 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சிபிராஜ் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சத்யராஜ் மகள் திவ்யா , ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் மகிழ்மதி என்ற ஒரு இயக்கத்தை நடத்தி அதன் மூலம் வுறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
நடிகர் சத்யராஜ் மகள் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு அதிர்ச்சிகரமான பதிவை தனது இன்ஸ்டாவில் போட்டுள்ளார்.
இதுகுறித்து திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிங்கிள் பேரன்ட்கள் அனைவரையும் பாராட்ட வேண்டிய பதிவு இது. கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மா கோமாவில் இருந்து வருகிறார். அவரை வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
அவருக்கு உணவு கூட டியூப் வழியாக செலுத்தி வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். ஆனாலும் நம்பிக்கையுடனும் நேர்மறையான எண்ணத்துடன் மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமாவார் என காத்திருப்போம். எங்கள் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா கோமாவில் இருப்பதால் அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அது போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய், அதாவது என் பாட்டியும் தவறிவிட்டார்கள். இதனால் நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன்.