வெளியான அதிர்ச்சி தகவல்..! கோவிஷீல்டு போல கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுத்துமாம்..!
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என்ற இரண்டு தடுப்பூசிகள் கொரோனா தொற்று எதிராக போடப்பட்டன. அவற்றின் வாயிலாக கோடிக்கணக்கிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த இரண்டில் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் அண்மையில் வெளியாகி இந்தியர்களை அதிர வைத்தன.
இந்நிலையில் கோவிஷீல்டு வரிசையில் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பக்கவிளைவுகளுக்கான சாத்தியங்களை, புதிய ஆய்வொன்று உறுதி செய்திருக்கிறது. இது இந்தியாவில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தன. இந்த கோவிஷீல்டு தடுப்பு ஊசியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் மத்திய அரசின் அனுமதி உடன் தயாரித்தது. கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளும் உலக அளவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கொரோனா தொற்று கொரோனா பெருந் தொற்று கட்டுக்குள் வந்தது. இந்த இரண்டில் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் அண்மையில் வெளியாகி இந்தியர்களை அதிர வைத்தன.
கோவிஷீல்டு தடுப்பூசி ரத்த உறைவை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக அதனை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்ட விவகாரம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் இப்போது 'கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்' என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வில் கோவாக்ஸின் போட்டுக்கொண்ட 1,024 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் 635 பேர் இளைஞர்கள், 291 பேர் நடுத்தர வயதினர் ஆவர்.
ஆய்வின் படி, கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்ட பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் உடல்நல கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வில் கலந்துகொண்ட 47.9 சதவிகித இளைஞர்கள் மற்றும் 42.6 சதவிகித நடுத்தர வயதினருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
10.5 சதவிகிதம் பேருக்கு தோல் சம்பந்தமான நோய்களும், 4.7 சதவிகிதம் பேருக்கு நரம்பு சம்பந்தமான கோளாறுகளும், 10.2 சதவிகிதம் பேருக்கு பொதுவான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.
5.8 சதவிகிதம் பேருக்கு தசை சம்பந்தமான பிரச்னைகளும், 5.5 சதவிகிதம் பேருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைகளும், 8.9 சதவிகிதம் பேருக்கு பொதுவான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.
முக்கியமாக இந்த ஆய்வில் நடுத்தர வயதினருக்கு 1.6 சதவிகிதமும், பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு 2.8 சதவிகிதமும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.