1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி செய்தி : சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..!

1

சமீப காலமாக தெருவோரங்களில் அதிக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளது. அந்த தள்ளுவண்டி கடைகளில் முன்பு விற்கப்பட்ட இட்லி தோசை பொங்கல் பூரி என விற்கப்படுவதில்லை சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுஸ் எக் ஃபைடு ரைஸ், சிக்கன் 65 என அனைத்துமே பாஸ் ஃப்ட்டுகள் தான்! இந்த பாஸ்புட்டுகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்துமே ஏற்கனவே தயாரித்து வைக்கப்படும் உணவு மேலும் பொதுமக்கள் அவற்றை கேட்டு வரும் பொழுது தான் சூடாக செய்து கொடுக்கிறார்கள் அப்படி சூடாக பரிமாறப்படுவது பல உணவு பிரியர்களுக்கு சுவைக்க வேண்டுமென்ற ஆசையையும் தூண்டிவிடுகிறது.

மேலும் பெரிய பெரிய ஹோட்டல்களில் விற்கப்படும் விலையில் இந்த சாதாரண தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படுவதில்லை குறைந்த செலவில் சூடாக மிகவும் விரைவாக உணவு கிடைக்கிறது என்பதற்காகவும் பலர் பல நேரங்களில் பாஸ்போர்ட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகளை நாடி செல்கிறார்கள். 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி என்னும் இளைஞர் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார், இவர் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிக்கன் ரைஸ் உண்ட பிறகு தான் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் மாவட்ட அலுவலகங்கள் உணவகத்தை சோதனையிட்டதோடு அதனை மூடி ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். தினமும் அதிகம் பேர் வந்து உணவு சாப்பிட்டு செல்லும் அந்த ஹோட்டலின் உணவை உண்டு இருவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி ருந்து கலந்ததால் உயிரிழந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது.

Trending News

Latest News

You May Like