1. Home
  2. தமிழ்நாடு

காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு..!

1

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 85 ரூபாய் உயர்ந்து, ரூ.6,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து, ரூ.51,640-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ₹2,160 அதிகரித்துள்ளது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,218-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 100 ரூபாய் உயர்ந்து, ரூ.5,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 81,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.81,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like