1. Home
  2. தமிழ்நாடு

சிற்பி சொன்ன அதிர்ச்சி தகவல்.. 56 அடி முருகன் சிலை மூடல்..!

1

தமிழ்நாட்டில் முழுமுதற் கடவுளாக முருகனை பொதுமக்கள் வழிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தைப்பூச திருநாள் உள்பட முருகனுக்கு உகந்த நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அருபடை வீடுகளிலும் கூட்டம் அலைமோதும். தமிழகம் மட்டுமின்றி தென்இந்திய மாநிலங்களிலும் முருகன் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முருகன் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் ஏராளம். இதற்கு சாட்சி மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில்

இந்நிலையில், சேலம் மாவட்டம் ராஜமுருகன் கோவிலில் பிரமாண்டமான முருகன் சிலை அமைக்க கோவில் நிறுவன தலைவர் வெங்கடாசலம் முடிவு செய்தார். இதற்கான பணிகள் தொடங்கியது.தற்போது முருகன் சிலை வடிவமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. அப்போது தான் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முருகனின் முகம் என்பது முற்றிலும் மாறுபட்டு இருந்தது. வழக்கமாக கோவில்களில் இருக்கும் முருகனை போல் இந்த முருகன் சிலை இல்லை.

சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அழகென்று செல்லுக்கு முருகன் தானே.. ஆனால் இங்கு என்ன முருகனின் முகம் ஒழுங்கின்றி சீரின்றி உள்ளது என கடுமையா விமர்சித்தனர்.இதனை பார்த்த பலரும் கோவில் நிர்வாகம் மற்றும் சிலை வடிவமைத்த நிர்வாகியை விமர்சனம் செய்ய தொடங்கினர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி கூறியதாவது " சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் கோவில் சிலையைப் போல் எங்கள் ஆலயத்திலும் ஒரு சிலையை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலை செய்யும் நபர்களுக்கு இதனை கொடுத்தேன் ஆனால், எப்படி கட்டப்போறோம் சிலையை என்பது குறித்து ஒரு வரைப்படம் கூட சிலை செய்பவர்கள் காட்டவில்லை என தெரிவித்தார். இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன். நீங்கள் தெரிந்தவர் என்ற காரணத்திற்காகத்தான் இதனைச் செய்ய ஒத்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.இதை கேட்ட கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.தற்போது ரூ.40 லட்சம் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சிலை புனரமைப்பு செய்யப்படும்'' என கோவில் நிர்வாகத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த சிலை உடனடியாக மூடப்பட்டு புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

Trending News

Latest News

You May Like