1. Home
  2. தமிழ்நாடு

பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி... ரயில் கட்டணம் மேலும் உயர்கிறது !

பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி... ரயில் கட்டணம் மேலும் உயர்கிறது !


ரயில்வே துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் உறுதியாக உள்ளது. மேலும், ரயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரயில் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மக்களுக்கு சேவை கிடைக்காது, அனைத்து இடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, பல துறைகளுக்கு கட்டணம் உயரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த “உபயோக கட்டணம்” ஒன்றை விதிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் ரயில் டிக்கெட் கட்டணம் சற்று உயருகிறது.

பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி... ரயில் கட்டணம் மேலும் உயர்கிறது !

ரயில் நிலையங்களை உபயோகிக்கும் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதன் மூலம் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறுகையில், முக்கிய ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம்.

பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி... ரயில் கட்டணம் மேலும் உயர்கிறது !

ரயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்த கட்டணம் மிக குறைந்த அளவில் இருக்கும். பயணிகளை பாதிக்கிற வகையில் இருக்காது. உலகத் தரமான வசதிகளை ரயில்வே கொடுப்பதற்கு இது பயன் உள்ளதாக அமையும்.

இந்தியன் ரயில்வே துறையில் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் 10 முதல் 15 சதவீத ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும் என அவர் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like