அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 167 கிலோ மீன்கள் பறிமுதல்..!

கடலிலிருந்து பிடித்துவரப்பட்ட மீன்களை பதப்படுத்தினாலும், சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்றுவிடுகிறார்களாம்.. அதாவது, சவக்கிடங்குகளில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற மருந்ததைதான், மீன்களின் மீது சிலர் பூசுகிறார்கள். இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்குமாம்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சென்னை காசிமேட்டில் இப்படியொரு பிரச்சனை கிளம்பியது.. தாங்கள் பிடிக்கும் உள்ளூர் மீன்களுடன், தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட, வெளி மாநில மீன்கள் கலந்து விற்கப்படுவதாக, காசிமேடு சிறிய விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினார்கள்.
வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட மீன்களை, துறைமுகத்தில் தான் பிடிக்கப்பட்டது என்று ஏமாற்றி விற்பதுடன், இந்த கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாகவும் உணவுத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களே நேரடியாக புகார் தந்தனர்.இதையடுத்து, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள், காசிமேட்டில் ஒருநாள் முழுக்க சோதனையை மேற்கொண்டனர்.. இறுதியில் 350 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அவைகளை அழித்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலும், அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக புகார் கிளம்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த புகாரையடுத்து, அங்குள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில், பட்டுக்கோட்டை மீன்வளத் துறை ஆய்வாளர்கள் வீரமணி, பிலிப்ஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மார்க்கெட்டில் இருந்த 5 கடைகளில் சாப்பிட தகுதியற்ற, அழுகிய நிலையில் இருந்த 167 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவைகளை நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமானோர் இந்த மீன்களை வாங்கியிருக்க கூடும். ஆனால், நேற்றைய தினமே கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மீன் பிரியர்களுக்கு நிம்மதியை தந்தது. தஞ்சை மார்க்கெட்டில் இருந்த 5 கடைகளில் சாப்பிட தகுதியற்ற, அழுகிய நிலையில் இருந்த 167 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவைகளை நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.. கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மீன் பிரியர்களுக்கு நிம்மதியை தந்தது.