1. Home
  2. தமிழ்நாடு

டிடிஎஃப் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! இனி டி.டி.எஃப் வாசன் பைக் தொடவே முடியாது?

1

யூடியூப் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.இதற்கிடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இவர்மீது உள்ளன. 

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், பெங்களூர் - சென்னை விரைவுச் சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு டிடிஎஃப் வாசன் சென்றார். அதிவேகமாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே முன் சக்கர வாகனத்தை வீலிங் செய்த பொழுது நிலைதடுமாறினார். அவரது வாகனம் சாலை ஓரம் தடுப்பை மோதி பறந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக, சிறு காயங்களுடன் டிடிஃப் வாசன் உயிர் தப்பித்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரின், விபத்து காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி வருகிறது.

இந்த நிலையில், அவரின் டிடிஎப் வாசனின் ஒட்டுநர் உரிமத்தை ரத்து செய்யத் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. காஞ்சிபுரத்தில் வீலிங் செய்தபோது நடந்த விபத்தில் டிடிஎப் வாசன் காயமடைந்த நிலையில், போக்குவரத்து ஆணையரகம் இந்த பரிந்துரையை அளித்துள்ளது. மோட்டர் வாகன சட்டப்படி பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஒட்டியதாக டிடிஎப் வாசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை அஜாக்கிரதையாக ஒட்டியது உட்பட 2 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த வீடியோவை போதிய ஆதாரமாக வைத்து இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டர் வாகன சட்டம் 19இன் படி லைசென்ஸ் வழங்கும் அதிகாரிக்கு அதை ரத்து செய்யும் அதிகாரமும் இருக்கிறது..இந்தச் சட்டம் ஒருவர் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் லைசென்ஸை ரத்து செய்யும் அதிகாரத்தைச் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு அளிக்கிறது.. இதற்கிடையே டிடிஎப் வாசன் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஒட்டியதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிடிஎஃப் வாசன் பைக் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் ஆரோக்கியமாகவும், ஆட்சேபத்துக்குரிய வகையிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Trending News

Latest News

You May Like