1. Home
  2. தமிழ்நாடு

அமேசான் வாடிக்கையாளருக்கு ஷாக்கிங் நியூஸ்..! இனி ஒவ்வொரு ஆர்டருக்கு கூடுதல் கட்டணம் செலுத்தணுமாம்..!

1

அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவலை தந்திருக்கிறது. இனி அமேசான் செயலி வாயிலாக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ஐந்து ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். அமேசான் நிறுவனம் தங்கள் செயலி வாயிலாக எடுக்கப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஐந்து ரூபாயை மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக வசூல் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. அமேசானில் பிரைம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும் இந்த ஐந்து ரூபாய் மார்க்கெட் பிளேஸ் கட்டணம் பொருந்தும் என அமேசான் நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூல் செய்கின்றன. தங்களுடைய செயல்பாட்டு செலவினங்களுக்கு இந்த கட்டணம் வசூல் செய்வது மிகவும் முக்கியம் என இந்த நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்த சூழலில் அமேசான் நிறுவனமும் அதே பாணியை பின்பற்றி ஐந்து ரூபாய் மார்க்கெட் பிளேஸ் கட்டணம் அனைத்து ஆர்டர்களுக்கும் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

நாம் எவ்வளவு தொகைக்கு ஆர்டரை அமேசானில் புக் செய்தாலும் கட்டாயம் அத்துடன் இறுதியில் ஐந்து ரூபாய் மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக சேர்த்து தான் மொத்தம் நான் செலுத்த வேண்டிய தொகை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மார்க்கெட் பிளேஸ் கட்டணம் என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் மிகச் சிறந்த ஒரு ஷாப்பிங் அனுபவத்தை தருவதற்கு இந்த கட்டணம் என்பது தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

முதலில் சோமேட்டோ , ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் தான் தங்களுடைய செயலிகள் வாயிலாக இதுபோன்ற பிளாட்பார்ம் கட்டணங்களை வசூல் செய்ய தொடங்கின. முதலில் இரண்டு ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் என வசூல் செய்தோது தற்போது அதனை 11 ரூபாய் என உயர்த்திவிட்டன. இந்த கட்டணங்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like