1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி செய்தி..! கோவையில் சைபர் குற்றங்களால் மக்கள் இழக்கும் தொகை வருடா வருடம் அதிகரிக்கிறது!

1

கோவையில் சைபர் குற்றங்களால் ரூ.3 கோடி இழந்ததாக 2021ல் மக்களிடம் இருந்து புகார் வந்தது. அதுவே 2022ல் ரூ.13 கோடியாகவும், 2023ல் ரூ.48 கோடியாகவும் அதிகரித்தது.

2024ல் இதுவரை ரூ.98 கோடியாகவும் அதிகரித்து வந்துள்ளது என அண்மையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதில் குற்றவாளிகளிடம் இருந்து 50% பணம் (ரூ.49.25 கோடி) முடக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் மூலம் சட்டப்படி இந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த ஆண்டில் நீதிமன்றம் மூலம் ரூ.10.34 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை இந்த ஆண்டில் 6798 சைபர் புகார்கள் வந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like