1. Home
  2. தமிழ்நாடு

ஷாக் நியூஸ்..! 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் ‘கட்’..!

1

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு துறைகள் அனைத்திலும் சுமார் 17,88,000 க்கும் அதிமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

இந்த நிலையில் உ.பி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 2023-2024 நிதியாண்டிற்கான அசையா மற்றும் அசையும் சொத்துகளின் அனைத்து விவரங்களையும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பு துறைசார் மதிப்பீட்டு தளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்” என்று கெடு விதித்து சுற்றறிக்கை அனுப்பியது.

யாரெல்லாம் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லையோ அவர்களின் அலுவலக வருகைப் பதிவு அப்சென்ட் எனக் கணக்கிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஊதியம் செலுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை ரீதியான வழிகாட்டுதல்களின் படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 17.88 லட்சம் அரசு ஊழியர்களில் இதுவரை 26 சதவிகிதம் பேர்தான் தங்களது சொத்து விவரங்களை போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 13 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

முன்னதாக அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிடுவதற்கு கடைசி நாளாக 2023 டிசம்பர் 31ஆம் தேதியை உத்தர பிரதேச அரசு அறிவித்தது. அதன் பிறகு அதற்கான கால அவகாசம் ஜூன் 30, ஜூலை 31 என தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அரசு ஊழியர்கள் யாரும் இதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இப்படியான கிடுக்கிப்பிடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like