1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி தகவல்..! 740 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போகும் பிரபல நிறுவனம்..!

1

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட காலணி நிறுவனமான நைக் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த பணிநீக்கம் அமெரிக்க தலைமையகமான ஓரிகனில் செய்யப்பட இருக்கிறது. இது காரணம் என்னவென்றால் 2024-25 ஆம் நிதியாண்டில் முதல் பாதியில் வருவாய் குறைந்து இருப்பதால் செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நைக் 740 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தற்போது முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 28 ஆம் தேதி இரண்டாம் கட்ட பணிநீக்கம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 1600 பேரை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like