1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி தகவல்..! 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் தகவல் கசிவு..!

1

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. வங்கி கணக்கு துவங்குவதில் இருந்து அரசின் சலுகைகளை பெறுவது வரையிலும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இத்தகைய, ஆதார் எண்ணை பயன்படுத்தி தற்போது சமூகவலை பக்கங்கள் மூலமாகவே தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை காப்பதற்காகவும் அரசு ஏகப்பட்ட வசதியினை செய்துகொடுத்து வருகிறது. மேலும், அவசியமில்லாமல் யாருடனும் 16 இலக்க ஆதார் எண்ணை பகிர்ந்துகொள்ள கூடாது.

இவ்வாறு, அரசால் பாதுகாக்கப்படும் ஆதார் தகவல் கசிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது, 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமான ஆதார் தகவல்கள் லீக்காகியுள்ளதாக அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெக்யூரிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குடிமகனின் பெயர், தொலைபேசி எண்கள், முகவரிகள், ஆதார், பாஸ்போர்ட் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like