அதிர்ச்சி தகவல்.. கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது: மேலும் பல அலைகள் வரக்கூடும்..!

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பல்வேறு வகையில் உருமாறி தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.
உலக நாடுகள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த கொரோனா வைரஸ், ஆல்பா’ என்றும், டெல்டா வைரஸ் எனவும் தற்போது ஒமைக்ரானாக உருமாறி இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா குறித்து பேசியுள்ள நுண்ணுயிரியியல் நிபுணர் ககன்தீப் காங், இந்த கொரோனா வைரஸை ஒழிக்கவே முடியாது; அது, நம்முடன் பூமியில் இருக்கும் என நுண்ணுயிரியல் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட் -2 மற்றும் அதன் திரிபுகளுடன் மனிதர்கள் வாழும் நிலை தான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் பல கொரோனா அலைகள் வரக்கூடும் என்றும் மற்ற கொரோனா திரிபுகளை விட ஒமைக்ரான் வீரியம் குறைவானதுதான் எனத் தெரிவித்துள்ளார்.