1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி தகவல்! “2024 இறுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்காது”!!

அதிர்ச்சி தகவல்! “2024 இறுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்காது”!!


2024ஆம் ஆண்டு இறுதிவரை கொரோனா தொற்று தடுப்பூசி தயார் ஆகாது என உலகின் மிகப்பெரும் தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி நிறுவன அதிகாரியின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, இதனால் குறைந்த நேரத்தில் அதிக டோஸ் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்க சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தயார் செய்ய வேண்டும். எனவே உலகில் கொரோனா தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி தேவை உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

.கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like