அதிர்ச்சி தகவல்! ஒமைக்ரான் வேகமாக பரவும்!!

டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வேகமாக பரவக் கூடியது என்பது முதற்கட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. 63க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. இந்த தொற்றின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சில விளக்கங்களை தெரிவித்துள்ளது.
அதன்படி, டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் எனினும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், சமூகப் பரவல் நிகழும்பட்சத்தில் டெல்டா திரிபை ஒமைக்ரான் திரிபு விஞ்சும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி உற்பத்தியாளர்களான ஃபைசர், பயோ என்டெக் கடந்த வாரம் தங்கள் தடுப்பூசி மூன்று டோஸ்கள் ஒமைக்ரானுக்கு எதிராக தற்போது திறன்பட செயல்படுவதாக கூறியுள்ளன.
இதேபோல், தடுப்பூசி அதிகம் உள்ள பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தங்கள் மக்களை ஊக்குவிக்கின்றன.
newstm.in