1. Home
  2. தமிழ்நாடு

நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..! மாந்த்ரீகம் செய்வதாக கூறி 5 பேர் உயிரோடு எரித்துக்கொலை..!

Q

பீஹார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சதர் பூர்ணியா பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி பங்கஜ் குமார் சர்மா கூறியதாவது:
இன்று அதிகாலை 5 மணிக்கு சோனுகுமார், 16, என்ற சிறுவன் தன் குடும்பத்தினரை கிராம மக்கள் தாக்கி, உயிரோடு எரித்துக் கொன்று விட்டதாக கூறினான்.
நாங்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். இதில், பாபுலால் ஓரோன், சீதா தேவி, மஞ்சித் ஓரோன், அரணியா தேவி, காக்தோ ஆகிய 5 பேரின் எரிந்த உடல்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதே கிராமத்தை சேர்ந்த ராம்தேவ் ஓரோன் என்பவரின் குழந்தை மூன்று நாட்களுக்கு முன் இறந்து விட்டது.
இதற்கு, குறிப்பிட்ட இந்த 5 பேர் குடும்பத்தினர் செய்த மாந்திரீகம் தான் காரணம் என்று கருதி, எரித்து கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Trending News

Latest News

You May Like