அதிர்ச்சி சம்பவம்.. இரும்பு ஸ்கேலால் ஆசிரியை தாக்கியதில் மாணவன் பலி !

சென்னை அடுத்த பள்ளிகரணை மல்லேஸ்வரிநகரில் வேலு என்பவர் தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் (14) மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் கார்த்திக் தனத நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வகுப்பறைக்கு வந்த ஆசிரியை ஆத்திரமடைந்து மாணவர்களை இரும்பு ஸ்கேலால் கண்மூடி தனமாக அடித்துள்ளார்.
இதில் சில மாணவர்களுக்கு கை, மற்றும் தோல் பகுதியிலும், கார்த்திக்கு தலையிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால் அவர் அலட்சியமாக பதிலளித்தாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மாணவர் கார்த்திகை ஆசிரியை தலையில் அடித்தது பெரும் காயத்தை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர் கார்த்திக்கை சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், பின் தலையில் ஆலமாக காயம் பட்டுள்ளதாகவும், இதனால் கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்பு பாதித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மாணவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் மாணவனின் இடது கண் பார்வை முற்றிலும் பறிபோனது. மேலும் 2ஆவது முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். ஆனால் கொரோனா காரணமாக 2-வது முறையாக அறுவை சிகிச்சை செய்ய முடியாதால் கார்த்திக்கை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு உறங்க சென்ற மாணவன் கார்த்திக் பின்னர் காலையில் எழுந்திருக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பார்த்தப்போது படுக்கையிலேயே உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு கதறிஅழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது அரசு ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் தாக்கியதால் தான் மாணவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
newstm.in