தந்தையே மகளை அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்..! காரணம் நீட் தேர்வு..?

தோண்டிராம் போசலே (45) என்பவர் பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சாதனா (16) டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் சாதனா குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவரின் தந்தை கோபமடைந்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. ஒருகட்டத்தில் மாவு தயாரிக்கப் பயன்படுத்தும் கல் அரவை இயந்திரத்தின் மரக் கைப்பிடியைப் பிடித்து, தனது மனைவி, மகன் முன்னிலையில் மகளை பலமாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சாதனனா சாங்லியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சாதனா உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பலத்த காயங்களால் அவர் இறந்ததாகத் தெரியவந்துள்ளதாக அட்பாடி காவல் நிலைய போலீசார் வினய் பாஹிர் தெரிவித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட சாதனாவின் தந்தை கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக, தந்தையே மகளை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.