தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..! கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்..?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, நேற்று மதியம் 3 மணியளவில் வெளியில் சென்றிருக்கிறார். அங்குள்ள சவுக்கு தோப்பு பகுதியில் மூதாட்டி நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 4 பேர் திடீரென மூதாட்டியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. முன்னதாக மூதாட்டி கத்தி சத்தமிட்டதால், அவரது சத்தம் வெளியில் கேக்காமல் இருப்பதற்கு வாயில் மண்னை அள்ளி போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளை அந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். காதில் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட முக்கால் சவரன்ன் நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
மூதாட்டி நடு காட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சிலர், மூதாட்டி காயமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை திருடிய நபர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சுந்தரவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ``இது கூட்டுப் பாலியல் என்று தவறாகத் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.மூதாட்டியை சுந்தரவேல் என்ற ஒரு நபர் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவரைத்தான் தற்போது கைது செய்திருக்கிறோம். இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை இல்லை.