1. Home
  2. தமிழ்நாடு

கோவையை உலுக்கிய சம்பவம்..! 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

1

கோவை சிறுமிக்கு நேர்ந்த துயரம்:

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி சமூக வலைத்தளங்கள் மூலம் சில இளைஞர்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி அவர்களை நம்பும் அளவிற்கு சென்றுள்ளது.
 

இதனை பயன்படுத்திக் கொண்ட இந்த இளைஞர்கள் சிறுமியை கோவை குனியமுத்தூரில் தங்கள் தங்கி இருக்கும் அறைக்கு வருமாறு கூறியுள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று கோவை  குனியமுத்தூரில் உள்ள அறைக்கு சென்ற நிலையில், அங்கு  தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டாக பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.  இதுகுறித்த புகாரின் பேரில்,  உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 கல்லூரி மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உங்கடம் போலீசார்  விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண் வைத்திருந்த செல்போன் சிக்னல்களைக் கொண்டு, அந்த டீனேஜ் பெண் இருக்கும்   இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பதிவிட்டுள்ள கண்டனத்தில் ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்ததாகவும், ஆனால் தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண் குழந்தைகள், மாணவிகள், காவலர்கள், அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள்கள் புழக்கத்தால் இளைஞர்கள் விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆனால் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் திமுக அரசு ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளி திமுகவை சேர்ந்தவன் என்றால் அவனை காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்ட பெண் மீதே பலி சுமத்தி விட்டு வீண் விளம்பரத்திற்காக தந்தை சகோதரன் என நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கூறுவாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Trending News

Latest News

You May Like