1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..! பள்ளி மாணவிகள் 3 பேருக்கு வன்கொடுமை..!

Q

சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 24ம் தேதி மாலை தனது பள்ளி தோழியின் இல்ல விழாவுக்கு சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரது தாயார் திரு.வி.க.,நகர் போலீஸில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், சிறுமி மாயமானதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து தேடினர். அப்போது, வீனஸ் நகரில் சிறுமி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, அங்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த 12 வயது சிறுமி அவரது காதலனுடன் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அதேபோல, மேலும் 2 சிறுமிகள் அவர்களின் காதலர்களுடன் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3 சிறுமிகளையும் மீட்ட போலீசார், அவர்களை முத்தியால்பேட்டையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், சிறுமிகளின் காதலர்கள் 3 பேர் மீதும் போக்சோ வழக்கில் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கைதான கரிமுல்லா மீது 11 வழக்குகளும், அபிஷேக் மீது 6 வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது

Trending News

Latest News

You May Like