சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..! பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை கடத்தி பாலியல் சீண்டல்..!

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தோழியுடன் சேலத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மற்றொரு தோழி சென்னை மாதவரத்தில் கணவருடன் தங்கியுள்ளார். கணவர் வேலைக்கு சென்று விடுவதால் தோழிக்கு உதவியாக இருக்க மேற்குவங்க பெண் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்துள்ளார். இரவு 10 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் பேருந்து வரவில்லை.
இதனை கவனித்து கொண்டிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணிடம் எங்கு செல்கிறீர்கள் என கேட்டபோது மாதவரம் என கூறியுள்ளார். நானும் அங்கு தான் செல்கிறேன் என கூறி அழைத்துள்ளார். பெண் வர மறுக்கவே ஆட்டோவில் ஏற வற்புறுத்தி அவரையும் அவரின் உடமையையும் ஆட்டோவில் வலுகட்டமாகமாக ஏற்றி அழைத்து சென்றுள்ளார்.
ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொல்லியுள்ளார். அப்போது வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறியுள்ளனர். அப்போது திடீரென இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமி சத்தம் போடவே சாலையில் சென்ற நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினர் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றனர். போலீஸார் துரத்துவதை கண்ட ஆட்டோவில் இருந்தவர்கள், சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.