சென்னையில் கண்கலங்க வைத்த துயர சம்பவம்..!!
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் (23) என்ற இளம் கிரிக்கெட் வீரர் TNPL தொடரில் விளையாடுவதற்காக நீண்ட காலமாக தயாராகி வந்துள்ளார்.
இதில் 2023, 2024 ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தேர்வு ஆவதற்கு தீவிர பயிற்சி பெற்று வந்துள்ள நிலையில் துரதிஷ்டவசமாக அவர் தேர்வாகாமல் இருந்துள்ளார்.இந்த இரு ஆண்டுகளும் கடுமையாக உழைத்தும் தேர்வாகாததால் இருந்ததால் கடும் மன வருத்தத்தில் சாமுவேல்ராஜ் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ராமாபுரத்தில் வழக்கம் போல் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து தனது பயிற்சியையும் முடிந்து கொண்டு சாமுவேல்ராஜ் வீட்டுக்கு திரும்பியுள்ளார் அப்போது மன உளைச்சலில் இருந்து வந்த சாமுவேல்ராஜ் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமுவேல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு கடுமையாக பயற்சி எடுத்து வந்த இளம் கிரிக்கெட் வீரர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.