அதிர்ச்சி சம்பவம்..! பெண் தன்னார்வலரைப் பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்..!
கொல்கத்தா நகரின் பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் காவல்துறையின் பெண் குடிமைத் தன்னார்வலர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தன்னை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பெண் தன்னார்வலர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், நேற்று முன்தினம் அதிகாலை 1.10 மணியளவில் காவல் நிலையத்தின் 4வது மாடியில் துர்கா பூஜைக்கு ஆடைகளைப் பரிசாகக் கொடுப்பதாகக்கூறி, சப்-இன்ஸ்பெக்டர் தன்னை கட்டாயப்படுத்தி கழிவறையில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படியில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பார்க் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் தனது புகாரை ஏற்க மறுத்ததையடுத்து, லால்பஜாரில் உள்ள கொல்கத்தா காவல்துறை தலைமையகத்திற்கும், டி.சி தெற்கு அலுவலகத்திற்கும் தனது புகாரை அனுப்பியதாக அந்தப் பெண் செய்தியாளர்களிடம் கூறினார்.