அதிர்ச்சி சம்பவம்..! நீச்சல் குளத்தில் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்..!
சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியை சோ்ந்த கட்டுமான தொழிலதிபா் மனோஜ் என்பவரிடம் சுகுமாறன் என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். மனோஜின் வீட்டில் உள்ள பணியாளா்கள் குடியிருப்பில் சுகுமாறன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் செப்டம்பர் 12ம் அன்று மாலை, சுகுமாறனின் 2-ஆவது மகனான 3 வயதாகும் ரித்தீஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே, விளையாடிக் கொண்டிருக்கும் போது, குளத்தில் விழுந்துவிட்டாா். அதை சிறிது நேரம் கழித்து கவனித்த சுகுமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தை ரித்தீஸை மீட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது மருத்துவமனையில் ரித்தீஸை பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மீண்டும் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏதும் இல்லை என்றும் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது என்றும் இதனால் இனி யாரும் பாதிக்கப்படாத வண்ணம் . ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதி மக்களுக்காக அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.