1. Home
  2. தமிழ்நாடு

ஷாக் கொடுக்கும் தங்கம்..!தங்கம் விலை ரூ.1,520 உயர்வு..!

Q

போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், பவுனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9,065-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் ஏற்றத்தை கண்டுள்ளது.
இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.9,105-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் கடந்த 3 நாட்களில் ரூ.1,520 உயர்ந்துள்ளது

Trending News

Latest News

You May Like