1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஒட்டி அதிர்ச்சி..! வண்டி ரூ.30000, அபராதம் ரு.3.2 லட்சம்!

1

மோட்டார் வாகன சட்டத்தில் இந்திய அரசு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதன் அடிப்படையில் நோ பார்க்கிங் இடத்தில் வாகனங்கள் நிறுத்துதல், தவறான பாதையில் பயணம் செய்தல், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தல் போன்ற பல காரணங்களுக்காக இப்போது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராத தொகை அதிகரிக்கப்பட்டதை பலரும் எதிர்த்த நிலையில் தொகையில் மாற்றம் ஏதும் காணப்படவில்லை.

பெரு நகரங்களில் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபவர்களை நிறுத்தி அபராதம் விதிப்பது என்பது போக்குவரத்து காவல்துறைக்கு மிகவும் சவாலான விஷயம்.இதற்காக நவீன தொழில்நுட்ப கேமராக்களை முக்கியமான சாலைகளில் போலீசார் நிறுவி வருகின்றனர். இந்த கேமராக்கள் சாலைகளில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றன.இந்த கேமராக்கள் இருப்பது தெரியாமல் பலர் போலீசார் இல்லை என்ற தைரியத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகின்றனர். ஆனால் கேமராக்கள் அபராதம் விதிப்பதோடு, அது குறித்த தகவலை வாகன உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் அனுப்பிவிடும்.

இந்நிலையில் பெங்களூரில் வெங்கட்ராமன் என்பவர் தினமும் விதிகளை மீறி சென்றுள்ளார். இதனால் அவருக்கு அபராதமாக ரூ.3.2 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, பைக் மதிப்பு ரூ.30,000/- தான் .அந்த ஸ்கூட்டரின் விலையை காட்டிலும் அபராதம் 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like