பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..! வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான வீடியோ வெளியானது..!
வயநாடு கனமழையால் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் பெரும் உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி கடவுளின் தேசத்தை உருக்குலைத்து போட்டிருக்கிறது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற வைக்கிறது.
அந்த வீடியோ காட்சியில், கடந்த ஜூலை 29ம் தேதி, நள்ளிரவு 1 மணிக்கு மேல் திடீரென பாயும் வெள்ளம், அங்கிருக்கும் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. வயநாடு, சூரல்மலை பகுதியில் இருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கும் இந்த வீடியோ காட்சியில் பாறைகளும் திடீரென வந்து விழுந்ததால் கடையின் சுவர்கள் உடைவதும் பதிவாகி இருக்கிறது.
பூஞ்செரிமட்டம் கிராமத்தில் தொடங்கிய நிலச்சரிவு, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளை நிலைகுலையச் செய்த நிலையில், இந்த நிலச்சரிவில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 18, 2024
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான CCTV காட்சிகள்#WayanadLanslide #wayanadtragedy #CCTV #keralaflood #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/AzdlEbYyv5