பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..! திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை அடிச்சு தூக்கிய அரசு பேருந்து..!
HSR லே-அவுட்டுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வால்வோ பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இது வாகன நெரிசல் காரணமாக மெதுவாக பயணித்தது.
திடீரென ஒருகட்டத்தில் பிரேக் பிடிக்காமல் வேகமாக சென்ற வண்ணம் இருந்தது. இதனால் முன்னால் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது முட்டி தள்ளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.