1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி அறிவிப்பு.. பிஸ்கட், சோம்பு, ஷாம்பு, நொறுக்கு தீனிகளின் விலை 33% வரை உயர்கிறது!

அதிர்ச்சி அறிவிப்பு.. பிஸ்கட், சோம்பு, ஷாம்பு, நொறுக்கு தீனிகளின் விலை 33% வரை உயர்கிறது!


நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு முதல் பற்பசை வரை பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க உள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வது சாமானியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தப்படும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4% முதல் 33 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
அதிர்ச்சி அறிவிப்பு.. பிஸ்கட், சோம்பு, ஷாம்பு, நொறுக்கு தீனிகளின் விலை 33% வரை உயர்கிறது!

பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால் இந்த விலை ஏற்றதை தவிர்க்க இயலாததாக உள்ளத என அந்நிறுவனங்கள் கூறுகின்றன. விலையேற்றத்தின் மூலம் எந்ததெந்த பொருட்கள் எவ்வளவு விலை அதிகரித்துள்ளது என்ற தகவலும் வந்துள்ளது.

அதன்படி, ஹிந்துஸ்தான் யூனி லிவர் தயாரிக்கும் டவ் சோப்புகள், ஷாம்புகள் மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலை வரும் வாரங்களில் 12% வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 2வது முறையாக இந்நிறுவனம் விலை ஏற்றத்தை மேற்கொள்கிறது. அதே போல் ரின் சோப்புகள் விலையை 5% உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிர்ச்சி அறிவிப்பு.. பிஸ்கட், சோம்பு, ஷாம்பு, நொறுக்கு தீனிகளின் விலை 33% வரை உயர்கிறது!

மேலும் லக்ஸ் சோப்பு, ஷாம்புக்களின் விலையை 10%க்கு மேல் உயர்த்துகிறது. 19 மில்லி அளவு கொண்ட கம்போர்ட் கண்டிஷனர் விலை 33% வரை உயர்த்தப்பட்டுள்ளது. பார்லிஜி நிறுவனம் 3 மாதங்களில் 15% வரை பிஸ்கட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் 20% வரை உயர்த்த முடிவு எடுத்துள்ளது. டைகர், குட் டே, மில்க் பிக்கீஸ் உள்ளிட்ட பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் 3 மாதங்களுக்குள் 7.5% அதற்கு பிறகு 10% விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஐடிசி நிறுவனம் பெர்பியும்கள் விலை 7% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விவில் சோப்பு விலை 9% உயர்த்த உள்ளது ஐடிசி நிறுவனம். மேலும் பல நிறுவனங்கள், நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள் விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிதிச்சூழலில் புதிய சவாலை எதிர்கொள்வர் என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like