1. Home
  2. தமிழ்நாடு

'ஷாக்' ஆன நகைபிரியர்கள்! எக்குத்தப்பாய் எகிறிய தங்கம் விலை..!

Q

ஆபரணத் தங்கத்தின் விலையை இன்று அறிந்த பலரும் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றனர். காரணம், இன்றைய தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்திருப்பதுதான். சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825 என்ற அளவில் இருக்கிறது.

கிராமுக்கு ரூ.120 அதிகரித்துள்ளதால் ஒரு சவரன் தங்கத்தின் விலையும் எகிறி இருக்கிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.54,600 ஆக உள்ளது. தங்கத்தின் விலை ஒரேடியாக சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது, நகை பிரியர்களை அதிகபட்ச அதிர்ச்சியில் கொண்டுபோய் விட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like