அதிர்ச்சி! கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் பலி!
உலகம் முழுவதும் கொடூர கோரத் தாண்டவம் ஆடி உயிர்களை பலி வாங்கி வருகிறது கொரோனா தொற்று. பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இரவு பகலாக உழைத்து வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட பரிசோதனைகள் பலனளித்த நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில், பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு பரிசோதனைகளில், உலகளவில் அதிகாரப்பூர்வமாக ஏற்பட்ட முதல் மனித உயிரிழப்பு இது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பரிசோதனையில், தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனை நல்ல பலனளித்த நிலையில், 2ம் கட்ட பரிசோதனையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த தன்னார்வலரும், மருத்துவருமான ஜோனோ ஃபீடோசா தனது 28வது வயதிலேயே உயிரிழந்தது மருத்துவ உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரேசிலில் மட்டும் இதுவரை சுமார் 8,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.