1. Home
  2. தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு ஷாக்..! வீட்டில் மினி பார்களை அமைக்க அதிரடி தடை விதித்த உத்தரகண்ட் அரசு..!

1

உத்தரகண்ட் மாநிலத்தில் 2023 – 24 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் தாக்கல் செய்த நபர்கள் வீட்டில் மினி பார்களை அமைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்குவதற்கு கலால் துறை அனுமதி அளித்தது. இதற்காக ஆண்டுக்கு ரூபாய் 12,000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதற்கான உரிமம் பெற்றவர்கள் ஒன்பது லிட்டர் இந்திய தயாரிப்பு மதுபானம்.

18 லிட்டர் வெளிநாட்டு மதுபானம். ஒன்பது லிட்டர் ஒயின் மற்றும் 15 .6 லிட்டர் பீர் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மினி பார் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு வீட்டிலேயே தனிப்பட்ட மினிபார்களை அமைப்பதற்கு கலால் துறை அளித்திருந்த உத்தரவை திரும்ப பெற்றது.

மினிபார்களை அமைப்பதற்கான உரிமங்களை வழங்குவது தொடர்பாக கலால் துறையின் கையேட்டின் விதிகள் 11 மற்றும் 13 மறு உத்தரவு வரும் வரை திரும்ப பெறப்படுவதாக கலால் ஆணையர் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதனால் ஏற்கனவே மினி பார் வைத்துள்ள நபர்கள் இவற்றை அரசு அறிவிக்கும் வரை மூடி வைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like