மது பிரியர்களுக்கு ஷாக்..! விரைவில் மதுபானம் விலை உயர்கிறது..!

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 4829 மதுக்கடைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூடப்பட்ட 500 மதுக்கடைகளால், நஷ்டம் வந்துள்ளால், அதை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கையை அரசு யோசித்து வருகிறது. சமீபத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும், பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனைகள் தரப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது... ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.
இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. இந்த தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.