மக்களுக்கு ஷாக்..! இந்தியாவில் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்வு..!

இந்தியாவில் ரேஷன் கடைகளில் கோதுமை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக கோதுமை விலை 1.6% அதிகரித்துள்ளது. இதற்கு, விழா காலத்தை ஒட்டிய அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி போன்றவை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் 26 மில்லியன் டன் கோதுமை பெற முடிந்தது.
மேலும் அடுத்து அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர இருப்பதால் அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி உள்ளிட்டவைகளால் கோதுமை விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அரிசியைப் போன்று கோதுமையும் முதன்மை நாட்டின் உணவாக உள்ளது. இதனிடையே கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை தற்போது அதிகரித்துள்ளது. ஆயுதபூஜை, தீபாவளி போன்று அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் கோதுமையின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் குறைந்த அளவு இருப்பு, அதிகப்படியான இறக்குமதி வரி போன்றவையே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.தேர்தல் நெருங்குவதால், இருப்புகளை சந்தைக்கு கொண்டுவருவதன் மூலமும், கோதுமை மீதான 40% இறக்குமதி வரியைக் குறைப்பதன் மூலமும் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தில்லியில் கோதுமை விலை 1.6% அதிகரித்து ஒரு மெட்ரிக் டன் ரூ.27,390ஆக விற்பனையாகிறது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 22% அதிகம் ஆகும். நடப்பாண்டில், இந்திய விவசாயிகளிடமிருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 26.2 மில்லியன் டன் கோதுமையே பெற முடிந்தது. இதனால் இருப்பும் வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது.