1. Home
  2. தமிழ்நாடு

பயணிகளுக்கு ஷாக்..! மின்சார ரயில்கள் மூன்றாவது வாரமாக ரத்து!

Q

கோடம்பாக்கம் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சாா்பில், தொடர்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், புறநகர் பகுதியில் இருந்து மாநகரப் பகுதிக்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரயில் சேவை இல்லாததால் பயணிகள் சொந்த வாகனங்கள் மூலமாகவும், பேருந்துகள் மற்றும் மெட்ரோ உதவியுடனும் மாநகரப் பகுதிக்குள் பயணம் செய்து வருகின்றனர். மேலும், கிளாம்பாக்கத்திற்கு செல்ல ஏதுவாக கூடுவாஞ்சேரி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.
செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து மாநகருக்குள் பயணிகள் வந்து செல்ல வசதியாக எழும்பூர், சென்ட்ரல், தியாகராய நகர், பிராட்வே, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய வழித்தடத்தில் கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.
மேலும் விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் மற்றும் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில்கள், இரண்டு வழித்தடங்களிலும் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like