1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..! தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது..!

Q

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஜுன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வன்ந்தது. 5 சதவீதம் வரை அப்போது கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் என சொல்லப்படுகிறது.

Trending News

Latest News

You May Like