வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..!பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது..!
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 101.23 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய தினம் ரூ. 100.80 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 43 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று டீசல் லிட்டருக்கு ரூ. 92.81 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய தினம் ரூ. 92.39 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 42 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.