GPay, PhonePe, AmazonPay வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி! Paytm எஸ்கேப்!!
GPay, PhonePe, AmazonPay போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு 30% உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இந்தியாவில் பரவலாகி உள்ளது. சிறிய பெட்டிக்கடைகளில் கூட ஜிபே, போன் பே பயன்படுத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்துவது எளிதாகிவிட்டது.
அதிலும் பண மதிப்பிழப்புக்கு பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அசுர வளர்ச்சி பெற்றது. அதிக எண்ணிக்கையில் மக்கள் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், டிஜிட்டல் வழியாக பணப்பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டு மொத்த பரிவர்த்தனையில் 30 சதவிகிதம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தொடங்கவுள்ளது. வாட்ஸ்ஆப் செயலிக்கு இங்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளதால், இதர செயலிகள் முடங்காமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கருதப்படுகிறது.
ஆனால் 30% உச்சவரம்பு Paytmக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in