அதிர்ச்சி! நாயை திட்டிய சம்பவம் கொலையில் முடிந்த கொடூரம்!!
அதிர்ச்சி! நாயை திட்டிய சம்பவம் கொலையில் முடிந்த கொடூரம்!!

வளர்ப்பு நாயை திட்டிய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த பால் லிங்கம் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் பால் லிங்கத்தின் வளரப்பு நாயை, நாயை என்று அழைத்து கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பால் லிங்கம், லிங்கராஜுடன் மோதலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், பால்லிங்கத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த பால் லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தாமாக முன்வந்து சரண் அடைந்த லிங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in