1. Home
  2. தமிழ்நாடு

ஷாக் கணிப்பு..! இந்த ஆண்டின் மத்தியில் 3ம் உலகப்போர் உருவாகும் - நிக்கோலஸ் ஆஜுலா..!

1

லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் மற்றும் ஜோதிடர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர் 38 வயதான நிக்கோலஸ் ஆஜுலா
 

நிக்கோலஸ் ஆஜுலா தனக்கு 17 வயதாக இருந்தபோது,​​யாரோ ஒருவர் தனது கனவில் வந்து எதிர்காலத்தை பற்றி கூறியதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் ஆண்டு தோறும் தெரிவித்து வரும் கணிப்புகள் பெரும்பாலானாவை இதுவரை பலித்துள்ளன.
 

2025 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், முன்கூட்டியே நிகழ்வுகளைக் கணிப்பதில் பிரபலமான நிக்கோலஸ் ஆஜுலா பல அதிர்ச்சிகரமான கணிப்புகளைச் செய்துள்ளார்.நிக்கோலஸ் ஆஜுலா கோவிட் 19 தொற்று நோய் பரவல், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிம்m செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட தீ உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார். அவர் 2025 ஆம் ஆண்டிற்கான தனது கணிப்புகளை அறிவித்துள்ளார்.
 

2025 ஆம் ஆண்டில், 3ஆம் உலகப் போர் தொடங்கும் என்று நிக்கோலஸ் ஆஜுலா கணித்துள்ளார். உலக மக்களிடையே இரக்கம், கருணை இல்லாத நிலை ஏற்படும் என்றும், இந்த ஆண்டின் மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கணித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு இரக்கமே இல்லாத ஆண்டாக இருக்கும். மதம் மற்றும் தேசத்தின் பெயரால் மக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வார்கள். அரசியல் கொலைகள் நடக்கும். தீமையும் வன்முறையும் அதிகமாக நடக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு மனிதர்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கு பூமி பழிவாங்கும் என நிக்கோலஸ் அஜுலா கணித்துள்ளார். மேலும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மனிதகுலத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 2025 ஆம் ஆண்டில், அறிவியலில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். குறிப்பாக இந்த ஆண்டு ஆய்வகங்களில் மனித உறுப்புகள் உருவாக்கப்படும் என்று கணித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில், பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும் என்றும், பிரபல அமெரிக்க பாடகர் கேட்டி பெர்ரி திருமண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும், ஆஸ்திரேலிய நடிகை கேட் பிளான்செட் பல விருதுகளை வெல்வார் என்றும் நிக்கோலஸ் ஆஜுலா கணித்துள்ளார்.

அதிக மழைப்பொழிவால் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் என்றும், மழை வெள்ளம் மில்லியன் கணக்கான வீடுகளை அழிக்கும், இதன் காரணமாக ஏராளமான மக்கள் இடம்பெயர்வார்கள். கடல் மட்டம் உயர்ந்து, முழு நகரங்களையும் மூழ்கடிக்கும் என்றும் கணித்துள்ளார் நிக்கோலஸ் ஆஜுலா.

கடந்த 2018 ஆம் ஆண்டே கொரோனா தொற்றை கணித்தார் நிக்கோலஸ் அஜுலா. கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என, முன்கூட்டியே கணித்துக் கூறியிருந்தார்.இவரது கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டு இறுதியில், பரவிய 'கொரோனா' தொற்று, உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

Trending News

Latest News

You May Like