அதிர்ச்சி! கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை! ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு சில இறுதி கட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. சில நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் பிளாஸ்மா மாதிரியைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஐசிஎம்ஆர் பிளாஸ்மா குறித்து நடத்திய ஆய்வில் இதனால் பலன் எதுவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் குதிரையிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்திற்கான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை முறையை பல மாநிலங்கள் பின்பற்றி வரும் சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவிப்பு, அதிர்ச்சியையும், அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.