அதிர்ச்சி! வலைக்குள் பதுங்கிய மலைப்பாம்பு!விரட்டிபிடித்த வனத்துறையினர் !

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வலைக்குள் பதுங்கிய சுமார் 12அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாயத்தோட்டம் அமைந்நதுள்ளது.
தோட்டத்தையொட்டிய வனப்பகுதியில் விவசாய பயிர்களுக்காக அவர் நீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்தை சுற்றியுள்ள பென்சிங் வலை அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்து.
இதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வலைக்குள் பதுங்கியிருந்த சுமார் 12 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
மலைப்பாம்பை வனத்துறையினர் பிடிக்கும் காட்சியை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.