அதிர்ச்சி.. அமைச்சர் சி.வே.கணேசன் மனைவி காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் மனைவி பவானி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 55.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.வே.கணேசன்.
இதையடுத்து, 2021 மே 7 அன்று தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு (தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு) அமைச்சராக பதவியேற்றார்.
இவருடைய மனைவி பவானி அம்மாள் (55). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பவானி அம்மாள், விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
பவானி அம்மாள் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.