அதிர்ச்சி தகவல்... சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா!

அதிர்ச்சி தகவல்... சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா!

அதிர்ச்சி தகவல்... சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா!
X

தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய சுமார் 39 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா லங்காவில் டிரக் டிரைவர் ஒருவர் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடியுள்ளனர். அந்த டிரைவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கும் கொரோனா பரவியுள்ளது. அதேபோல், கர்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் டிரைவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியது. இதனால், கடந்த 2 நாட்களில் நகரில் சுமார் 40 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

Next Story
Share it